Tamil Translation

எம்மைப்பற்றி

Water With A Difference – போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்” செயற்றிட்டமானது, எமது சமூகநலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படும் தனித்துவமான செயற்றிட்டமாகும்.

இச்செயற்றிட்டமானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உதவியை நாடி நிற்கும் மக்களின் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு செயற்றிட்டங்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்கான  பொதுவான தளமாகும்.

இக்கருத்திட்டமானது, எமது நெருங்கிய நண்பர்கள் மற்றும் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் மத்தியில், சமூக நலத்திட்டங்களுக்கு பங்களிப்பு செய்வது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது. காரணம், வறுமை மற்றும் இதர சமூக சவால்களை எம்மால் தனித்து முகம்கொடுக்க முடியாது என நாம் அறிவோம்!

உதவியை நாடி நிற்கும் சமூகங்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவகையில் வருமானத்தை ஈட்டித்தரும் வெற்றிகரமான வர்த்தக முறைமை ஒன்றை உருவாக்கும் எமது பயணத்தின் முதற்படியே இதுவாகும்!

நாம் எவ்வாறு செயற்படுகிறோம்

இதுபோன்ற சமூக நலத்திட்டங்களை தெரிவுசெய்யும்போது அவற்றிற்கான பரிந்துரைகள், அவற்றின் மூலம் எட்டப்படும் இலக்கு மற்றும் அவற்றால் ஏற்படுத்தப்படும் விளைவுகள் என்ன்பன கருத்திற்கொள்ளப்படும். நாம் தேவைப்பாடுள்ள சமூகங்களை நேரடியாகவே இனங்கண்டு அவர்களின் கதைகளை வெளிக்கொணர கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் எமது குடிநீர்ப்போத்தல் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியானது எமது தொண்டர்கள் மூலம் முற்றிலுமாக அச்ச்சமூகங்களை அடைவதையும் உறுதிசெய்வோம்.

ஏன் எமது போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தனித்துவமானது 

சந்தையிலுள்ள அனைத்து முன்னணி போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரைப்போலவே எமது நீரும் தரச்சிரப்பு மிகுந்த முறையில் போத்தலில் அடைக்கப்படுகிறது. எனினும் நாம் முன்னெடுக்கும் செயற்றிட்டத்தின் நன்நோக்கமும் இணைந்திருப்பதானது எமது நீரின் சுவையை மேலும் அதிகரிக்கிறது!

நீடித்த செயற்றிறன் மற்றும் இலாபத்தின் பங்களிப்பு 

சமூகத்தில் நீடித்த கால அடிப்படையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தவல்ல திட்டங்களிட்காக இக்குடிநீர்ப்போத்தல் விற்பனை மூலம் எட்டப்படும் வருமானத்தின் 60% இனை செலுத்த நாம் முன்வந்துள்ளோம். இதுதொடர்பில் நாம் ஆதரிக்கும் திட்டங்களிட்கு அளிக்கப்படும் நன்கொடைகள் தொடர்பில் ஒளிவுமறைவின்மையை பேணவும் நாம் உருதிகொண்டுள்ளோம்.

சமூக மற்றும் சுற்றாடல் ரீதியான கடப்பாடு

“Water With A Difference” ஆனது இலங்கைச்சந்தையில் உங்களால் மேற்கொள்ளக்கூடிய பகுத்தறிவு மிக்க தெரிவாகும்! மேலும் எமது புவி மீது நாம் ஏற்படுத்தும் தாக்கங்களை கருத்திற்கொண்டு எம்மாலியன்றவரை எமது வர்த்தக முறைமைகளால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகளை இழிவாக்கும் முயற்சிகளையும் எடுத்துள்ளோம்.

அத்துடன் எமது விநியோகஸ்தர்களுடன் இணைந்து சுற்றாடலுக்கு தீங்கிழைக்காத உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

மக்களை ஒன்றிணைப்பதன் மூலமான சமூக வர்த்தகம் 

எம்மால் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டமானது கல்வி, வாழ்க்கைத்தரம், சுகாதாரம் போன்ற பல்வேறு மட்டங்களில் வறுமையை ஒழிப்பதில் பங்களிக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடையது. ஏழ்மையும் தேவைப்பாடும் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் மக்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் கருவியாக இவ்வர்த்தகமுறை அமையும்.

இதனை அடிப்படையாகக்கொண்டு மிகச்சிறந்த வழிமுறைகளில் ஒரு பொது இலக்கை எட்டுவதற்காக தனிநபர்களும் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதை நாம் ஊக்குவிக்கின்றோம்!

எமது நீரைப்பற்றி 

எமது குடிநீரானது அடையப்படக்கூடியளவு தூய்மையை அடையப்பெற்றது. தனித்துவமான வடிகட்டல் முறைகளினூடு சுத்திகரிக்கப்பட்டு உரிய அளவில் கனியுப்புகளும் சேர்க்கப்பெற்றது. இயலுமானவரை சுத்தமாகவும், மலிவாகவும் கிடைக்கும் எமது நீரை கொள்வனவு செய்வதன் மூலம் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதில் பங்களிக்கும் வாய்ப்பை எமது வாடிக்கயாலர்களுக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்துள்ளோம்! எமது குடிநீரானது SLS – 894 தரச்சான்றிதழை பெற்றுள்ளதுடன் சுகாதார அமைச்சின் CFA/BW/67/2013-09 எனும் பதிவிலக்கத்தையும் கொண்டுள்ளது.

இப்பணியில் நீங்களும் எவ்வாறு இணைவது? 

நீங்களும் சமூக சேவையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை நாம், சாதாரண குடிநீரின் மூலம் உங்களுக்கு  இலகுபடுத்திதந்துள்ளோம்.

எம்மை பரிந்துரையுங்கள்! 

சந்தையிலுள்ள மற்றைய குடிநீர் போத்தல்களிட்கு பதிலாக எமது குடிநீரை தெரிவு செய்வதே, மிக இலகுவான முறையில் எங்களிற்கு உதவக்கூடிய வழியாகும். இது உங்கள் தனிப்பட்ட பாவனைக்கோ, உங்கள் நிறுவனத்தின் பாவனைக்கோ அல்லது நிதி திரட்டும் நோக்கிலோ இருக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உதவியை எதிர்பார்க்கும் ஒருவருக்கு, மேலதிக செலவின்றி நேரடியாக உதவும் வாய்ப்பை பெறுகிறீர்கள்!

தொண்டராக இணையுங்கள் 

எமது தொண்டர் அணியில் இணைவதன் மூலம் எமது செயற்றிட்டங்களிலும் எமது அலுவலகத்திலும் உங்களது ஆற்றலையும் நேரத்தையும் ஒதுக்கி எமக்கு உதவி புரியுங்கள்.

செய்தியை பரப்புங்கள் 

எமது இப்பணி தொடர்பான செய்தியை பலருக்கும் அறியத்தருவது, நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த உதவியாகும். சமூக வலைத்தளங்களிநூடாகவோ பத்திரிகையினூடாகவோ இதனை மேட்கொள்ளலாம். எமது இப்பணி மீது நம்பிக்கை கொண்டு அதை மற்றவர்களிடம் எடுத்துரைக்கக்கூடிய நண்பர்கள் எமக்கு அவசியமாகும்!

எமது முகவராகுங்கள் 

நீங்கள் ஒரு விநியோக முகவராக் இருந்தால் அல்லது அவ்வாறான யாரிடமும் தொடர்பிருந்தால் எமது வர்த்தக நாமத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவி புரியுங்கள். எமது பணியின் தனித்துவத்தை விளக்கி நற்பலனை அடைய ஏனையோருக்கும் வழிகாட்டுங்கள்.

உங்களது வியாபார நிறுவனத்தை எமது உற்பத்தியின் விற்பனையாளராக இணைத்துக்கொள்ளுங்கள் 

எமது உற்பத்தியின் பின்னுள்ள பயனுள்ள நோக்கமும், அதன் போட்டித்தன்மைவாய்ந்த விலையும் சந்தையிலுள்ள குடிநீர் போத்தல்களின் மத்தியில், கொடுக்கும் பணத்திற்கேற்ற பெறுமதிமிக்கதாக அதை மாற்றியுள்ளன. எனவே எம்முடன் இணைந்து இலாபமீட்டுவதுடன் நல்லதொரு பணியிலும் இணையலாம்!

Leave a Reply